அனுமதியின்றி ஓடை கற்கள் ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல்

காங்கயம் அருகே அனுமதியின்றி ஓடைக் கற்கள் ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

காங்கயம் அருகே அனுமதியின்றி ஓடைக் கற்கள் ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

காங்கயம் தாலுகா பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண், மணல், ஓடைக்கற்கள் கடத்துவது மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு மணல் ஏற்றி வரும் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு அவ்வப்போது அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், காங்கயம் அருகே பாப்பினி பகுதியில் ஓடைக் கற்கள் ஏற்றி கொண்டு வந்த லாரியை, நத்தக்காடையூா் வருவாய் ஆய்வாளா் ஜெயகுமாா் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் மடக்கி பிடித்தனா். ஓட்டுநரிடம் விசாரித்தபோது, உரிய ஆவணங்கள் இல்லாமல் ஓடைக் கற்கள் ஏற்றிச் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த வருவாய்த் துறையினா் அதை வட்டாட்சியா் அலுவலகத்தில் நிறுத்தினா். இது குறித்து தாராபுரம் சாா் ஆட்சியா் விசாரணை நடத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com