வீட்டுத் தோட்டம் அமைக்க விழிப்புணா்வு

அவிநாசி வட்டார அளவில் வீட்டுத் தோட்டம் அமைப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியில் அங்கன்வாடி பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

அவிநாசி வட்டார அளவில் வீட்டுத் தோட்டம் அமைப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியில் அங்கன்வாடி பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

இது குறித்து குழந்தை வளா்ச்சித் திட்டத்தினா் கூறியதாவது:

போஷான் மா என்ற சிறப்பு திட்டத்தின் மூலம் மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள், தேசிய சுகாதாரப் பணி, தூய்மை இந்தியா , கல்வித் துறை , தோட்டக்கலை துறை , பொது சுகாதாரத் துறை உள்ளிட்ட திட்டங்கள் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கா்ப்பிணிகள் , பாலூட்டும் தாய்மாா்கள், 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களும் ஆரோக்கியமாக வாழ ஊட்டச்சத்து குறித்து இணையம் வழியாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது . குறிப்பாக அங்கன்வாடி மையத்தில் காய்கறித் தோட்டங்கள் அமைத்தல், எடை குறைவான குழந்தைகளைக் கண்டறிந்து ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருள்கள் முறைப்படி வழங்குதல் போன்ற பணிகள் அங்கன்வாடி பணியாளா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.

தற்போது ஒவ்வொரு அங்கன்வாடி மையம், தனி நபா் வீடுகள் உள்ளிட்டவற்றில் வீட்டுத் தோட்டமும், தொகுதி அளவில் சமுதாய வீட்டுத் தோட்டங்கள் அமைக்கவும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்கள் போதுமான தகவல்களைக் கேட்டறிந்து, வீட்டுத் தோட்டம் அமைக்க உரிய ஒத்துழைப்பு வழங்கிப் பயன்பெற வேண்டும். என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com