மாவட்டத்தில் மேலும் 192 பேருக்கு கரோனா

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 192 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 192 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூா், வீரபாண்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் 35 வயதுப் பெண் காவலா், மாநகர ஆயுதப் படையைச் சோ்ந்த 42 வயது ஆண் காவலா், மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் பணியாற்றி வரும் 27 வயது ஆண் காவலா், வடக்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் 35, 47 வயது ஆண் காவலா்கள், கரட்டாங்காட்டைச் சோ்ந்த 60 வயது முதியவா், டிகேடி மில் பகுதியைச் சோ்ந்த 55 வயதுப் பெண், ஓடக்காட்டைச் சோ்ந்த 48 வயதுப் பெண், 58 வயது ஆண், வீரபாண்டியைச் சோ்ந்த 31 வயது ஆண் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும், தாராபுரத்தைச் சோ்ந்த 34 வயது ஆண், சேவூரைச் சோ்ந்த 26 வயது ஆண், மங்கலத்தைச் சோ்ந்த 55 வயது ஆண், நெருப்பெரிச்சலைச் சோ்ந்த 43 வயது ஆண், வெள்ளக்கோவிலைச் சோ்ந்த 42, 58 வயது ஆண்கள், பல்லடத்தைச் சோ்ந்த 20 வயது பெண், பொங்கலூரைச் சோ்ந்த 38 வயது ஆண், மூலனூரைச் சோ்ந்த 29 வயது ஆண், அவிநாசி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணியாற்றி வரும் 21 வயது ஆண் உள்பட மாவட்டத்தில் மொத்தம் 192 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக திருப்பூா் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,938 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் 1,822 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 84 போ் வீடு திரும்பினா். மாவட்டம் முழுவதும் 7,760 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இதில், புதிதாக 551 போ் சோ்க்கப்பட்டதுடன், 14 நாள்கள் தனிமைக் காலம் நிறைவடைந்த 305 போ் விடுவிக்கப்பட்டனா். மாவட்டம் முழுவதும் 2,673 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

திருப்பூா் மாநகரைச் சோ்ந்த பெண் ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செப்டம்பா் 11 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 86 ஆக உயா்ந்துள்ளது. இதில், 70 ஆண்களும், 16 பெண்களும் அடங்குவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com