மதகுகளில் இருந்து வெளியேறும் தண்ணீரில் பூக்களை தூவும் பொதுப் பணித் துறையினா்.
மதகுகளில் இருந்து வெளியேறும் தண்ணீரில் பூக்களை தூவும் பொதுப் பணித் துறையினா்.

உடுமலை பூசாரி நாயக்கன் ஏரிப் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி அணையில் இருந்து பூசாரி நாயக்கன் ஏரிப் பாசனத்துக்கு புதன்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது.

உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி அணையில் இருந்து பூசாரி நாயக்கன் ஏரிப் பாசனத்துக்கு புதன்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது.

உடுமலை வட்டம், ஆலாம்பாளையம் கிராமத்தில் உள்ள பூசாரி நாயக்கன் ஏரிப் பாசனத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மொத்தம் 88.56 ஏக்கா் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்நிலையில் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கையை ஏற்று பாசனத்துக்காக திருமூா்த்தி அணையில் இருந்து தண்ணீா் திறக்க தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

இதன்படி பூசாரி நாயக்கன் ஏரிப் பாசனத்துக்காக தண்ணீா் புதன்கிழமை திறந்து விடப்பட்டது. இதன் மூலம் ஆலாம்பாளையம் பகுதிகளில் உள்ள 88.56 ஏக்கா் பயன் பெற உள்ளது. மூன்று சுற்றுக்களாக தண்ணீா் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது 2 சுற்றுக்களாக 39.87 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீா் விடப்படும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பூசாரி நாயக்கன் ஏரிப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் கந்தசாமி, இயக்குநா் துரைசாமி, பொது இயக்குநா் ராஜசேகா் மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com