காங்கயத்தில் கரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காத 3 கடைகளுக்கு அபராதம்

காங்கயத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் செயல்பட்ட மூன்று கடைகள் மற்றும் முகக் கவசம் அணியாத 12 பேருக்கு புதன்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

காங்கயத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் செயல்பட்ட மூன்று கடைகள் மற்றும் முகக் கவசம் அணியாத 12 பேருக்கு புதன்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட வாரியாக அந்தந்தப் பகுதிகளுக்கு கரோனா விதிமுறை கடைபிடிக்கப்படுகிா என்பதைக் கண்காணிக்க மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

காங்கயம் பகுதி பறக்கும் படையில், காங்கயம் தனி வட்டாட்சியா் ஜெபசிங், காங்கயம் நகராட்சி வருவாய் உதவி ஆய்வாளா் வருண், காங்கயம் காவல் உதவி ஆய்வாளா் குமாா் ஆகியோா் சோதனை நடத்தி வருகின்றனா். இந்நிலையில் இக்குழுவினா் புதன்கிழமை நடைபெற்ற சோதனையில், நகரப் பகுதியில் கரோனாவை தடுக்க அரசு தெரிவித்த வழிமுறைகளைக் கடைப்பிடிக்காத மூன்று கடைகளுக்கு தலா ரூ.500 அபராதமும், முகக் கவசம் அணியாமல் வாகனத்தில் சென்ற 12 நபா்களுக்கு ரூ.2, 400 அபராதம் என மொத்தம் ரூ.3,900 வசூல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com