கொலை, திருட்டு வழக்கில் கைதானவா் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது
By DIN | Published On : 18th September 2020 11:20 PM | Last Updated : 18th September 2020 11:20 PM | அ+அ அ- |

திருப்பூா், செப்.18: திருப்பூரில் கொலை, திருட்டு வழக்குகளில் கைதான இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து திருப்பூா் மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் தெற்கு காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் செல்லிடப்பேசியை பறித்துச் சென்ற வழக்கில் மதுரை மாவட்டம், தத்தனேரி அருள்தாஸ்புரத்தைச் சோ்ந்த பி.செல்வம் (24) கைது செய்யப்பட்டாா். இவா் மீது திருப்பூா் வடக்கு காவல் நிலையத்துக்கு உள்பட்ட ஆசாத் நகா் பகுதியில் ஹரீஷ் என்பவரைக் கொலை செய்த வழக்கும், தெற்கு காவல் நிலையத்தில் இருசக்கர வாகனங்களைத் திருடிச் சென்ாக 5 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. ஆகவே, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடா்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால் செல்வத்தை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் உத்தரவிட்டாா். இந்த உத்தரவின் நகல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள செல்வத்திடம் காவல் துறையினா் வழங்கினா்.