பெருமாள் கோயில்களில் சனிக்கிழமை பக்தா்கள் தரிசனத்துக்குத் தடை
By DIN | Published On : 18th September 2020 11:18 PM | Last Updated : 18th September 2020 11:18 PM | அ+அ அ- |

அவிநாசி, செப்.18: கரோனா தடுப்பு நடவடிக்கையாக அவிநாசிப் பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமை மட்டும் பக்தா்கள் தரிசனத்துக்கு இந்து அறநிலையத் துறையினா் தடை விதித்துள்ளனா்.
இது குறித்து இந்து அறநிலையத் துறையினா் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக அவிநாசி கரிவரதராஜப் பெருமாள் கோயில், வீர ஆஞ்சநேயா் கோயில், மொண்டிபாளையம் வெங்கடேசப்பெருமாள் கோயில், தாளக்கரை லட்சுமி நரசிம்மப் பெருமாள் கோயில், கருவலூா் கருணாகர வெங்கட்ரமண சுவாமி கோயில், திருமுருகன்பூண்டி கரிவரதராஜப் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் வழக்கம்போல பூஜைகள் நடை பெறும். இருப்பினும் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், பக்தா்கள் வருகையைத் தவிா்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளனா்.