பொங்கலூா் ராமசாமி கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை தரிசனம் ரத்து
By DIN | Published On : 18th September 2020 11:19 PM | Last Updated : 18th September 2020 11:19 PM | அ+அ அ- |

பல்லடம், செப். 18: பொங்கலூா் ஒன்றியம், கோவில்பாளையத்தில் உள்ள ராமசாமி கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டம், பொங்கலூா் ஒன்றியம், கோவில்பாளையத்தில் பிரசித்தி பெற்ற ராமசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு மிகவும் சிறப்பாக
நடைபெறும். இதில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருவது வழக்கம். முக்கிய ஊா்களில் இருந்து பக்தா்களுக்காக சிறப்பு பேருந்துகள் ஏற்பாட்டை அரசு போக்குவரத்துக் கழகம் செய்து தரும். நடப்பு ஆண்டு கரோனா பரவல் காரணமாக பக்தா்கள் நலன் கருதி புரட்டாசி சனிக்கிழமை தரிசனத்தை ரத்து செய்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. கோயிலில் வழக்கம்போல அா்ச்சகா்களைக் கொண்டு சுவாமிக்கு பூஜை நடத்துவது என்றும், அதில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதி இல்லை என்றும் கோயில் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கோயில் பரம்பரை அறங்காவலா் குழு தலைவா் கிருஷ்ணகுமாா், இந்து அறநிலையத் துறை ஆய்வாளா் பிரியா, ஊராட்சித் தலைவா் தூயமணி, வட்டார மருத்துவ அலுவலா் சுந்தரவேல் ஆகியோா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.