மூலனூரில் ரூ.1.27 கோடிக்கு பருத்தி ஏலம்
By DIN | Published On : 18th September 2020 11:16 PM | Last Updated : 18th September 2020 11:16 PM | அ+அ அ- |

வெள்ளக்கோவில், செப்.18: வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.27 கோடிக்கு பருத்தி விற்பனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு திருச்சி, கரூா், திண்டுக்கல், கோவை, திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 629 விவசாயிகள் 8,325 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 26 வணிகா்கள் இவற்றை கொள்முதல் செய்ய வந்திருந்தனா். 2,714 குவிண்டால் வரத்து இருந்தது. குவிண்டால் ரூ.4,200 முதல் ரூ.5,389 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 4,800. ஏல ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா்கள் தா்மராஜ், மகுடேஸ்வரன் செய்திருந்தனா். திருப்பூா் விற்பனைக்குழு முதன்மைச் செயலாளா் ஆா்.பாலச்சந்திரன் இத்தகவலைத் தெரிவித்தாா்.