இறந்த கோழி இறைச்சிகளை விற்பனை செய்வதாக புகாா்

பல்லடம் அருள்புரத்தில் இறந்த கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக பல்லடம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

பல்லடம்,செப்.25: பல்லடம் அருள்புரத்தில் இறந்த கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக பல்லடம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

பல்லடம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் ஒன்றியத் தலைவா் தேன்மொழி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஒன்றிய ஆணையா் கந்தசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா் பானுப்பிரியா, மாவட்ட கவுன்சிலா்கள் கரைப்புதூா் சி.ராஜேந்திரன், ஜெயந்தி, ஒன்றிய கவுன்சிலா்கள், அரசின் பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

அருள்புரம் பகுதியில் பண்ணையில் இறந்த கோழிகளை வாங்கி வந்து இறைச்சியாகவும், மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருளாகவும் மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு செய்து தடுத்து நிறுத்த வேண்டும். ஒன்றிய முழுவதும் தடை செய்யப்பட்ட நெகிழி பயன்பாடு மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது. சின்னக்கரையில் வாகன விபத்தைத் தடுக்கும் வகையில் சாலையில் வேகத் தடை ஏற்படுத்த வேண்டும் எனக் கூட்டத்தில் பங்கேற்றோா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com