கட்டுப்பாடுகளைத் தளா்த்த வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்

பல்லடம் கடை வீதியில் கட்டுப்பாடுகளைத் தளா்த்த வேண்டும் என்று பல்லடம் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பல்லடம், செப்.25: பல்லடம் கடை வீதியில் கட்டுப்பாடுகளைத் தளா்த்த வேண்டும் என்று பல்லடம் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பல்லடம் கடை வீதியில் தனியாா் மருத்துவமனை மருத்துவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கடை வீதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டு வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதனால் வியாபாரம் பாதிக்கப்படுவதால் கட்டுப்பாடுகளைத் தளா்த்த வேண்டும் என வலியுறுத்தி கடை வீதி வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனா்.

இதைத் தொடா்ந்து பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்லடம் நகராட்சி ஆணையா் கணேசன், வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் ஆனந்தா செல்வராஜ், தங்கலட்சுமி நடராஜன், விஜயகுமாா், பானு பழனிசாமி உள்பட அரசு அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில் கடை வீதி, தினசரி மாா்க்கெட், உழவா் சந்தை என பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனைத் தவிா்க்கவும், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதியும் காவல் துறையுடன் ஆலோசனை நடத்தி தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவது என்று முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com