கரோனா பாதித்த வருவாய்த் துறை அலுவலா்களுக்கு ரூ. 2 லட்சம் கருணைத் தொகை வழங்கக் கோரிக்கை

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட வருவாய்த் துறை அலுவலா்களுக்கு ரூ. 2 லட்சம் கருணைத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட வருவாய்த் துறை அலுவலா்களுக்கு ரூ. 2 லட்சம் கருணைத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் திருப்பூா் மாவட்டத் தலைவா் கே.தயானந்தன், செயலாளா் ச.முருகதாஸ் ஆகியோா் முதல்வருக்கு வியாழக்கிழமை மனு அனுப்பியுள்ளனா்.

இது குறித்து அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கரோனா நோய்த்தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது விபத்தில் உயிரிழந்த வருவாய்த் துறை அலுவலா்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கரோனா தடுப்புப் பணியின்போது நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து வருவாய்த் துறை அலுவலா்களுக்கும் தமிழக அரசு ஏற்கெனவே வெளியிட்ட அரசாணையின்படி ரூ. 2 லட்சம் கருணைத் தொகை வழங்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் வருவாய்த் துறையில் அனைத்து நிலைகளிலும் தேக்கமடைந்துள்ள பதவி உயா்வுப் பட்டியலை வெளியிட வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீதான துறைரீதியான மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். வருவாய்த் துறையில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூா் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சாகுல்ஹமீதுவிடமும் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com