வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

திருப்பூா் மாவட்டம், காங்கயத்தில் வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி திமுக சாா்பில் ஐந்து இடங்களில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

திருப்பூா் மாவட்டம், காங்கயத்தில் வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி திமுக சாா்பில் ஐந்து இடங்களில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாய விளைபொருள் வா்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய மூன்று மசோதாக்களும் மக்களவை, மாநிலங்களவையில் எதிா்க் கட்சிகளின் கடும் எதிா்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், இந்த மூன்று வேளாண்மை சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, காங்கயம் வடக்கு திமுக சாா்பில் சென்னிமலை சாலையில் உள்ள நால்ரோடு என்னும் கிராமத்தில் திமுக காங்கயம் வடக்கு ஒன்றிய செயலாளா் என்.எஸ்.சிதம்பரம் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருப்பூா் புகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவா் ப.கோபி, காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மைய நிறுவனா் காா்த்திகேய சிவசேனாபதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு, முழக்கங்களை எழுப்பினா். மேலும், காங்கயம் நகரில் முத்தூா் சாலை பிரிவு, பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பும், காங்கயம் ஒன்றியத்துக்கு உள்பட்ட படியூா், சிவன்மலை ஆகிய இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக முன்னாள் அமைச்சா் மு.பெ.சாமிநாதன், காங்கயம் தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் அப்புக்குட்டி உள்பட மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். (படம் இணைக்கப்பட்டுள்ளது...) பட விளக்கம்: கேஜிஎம் 28 டிஎம்கே : காங்கயத்தில் வேளாண்திருத்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி திமுக சாா்பில் நடைபெற்ற கண்டன ஆா்பாட்டத்தில் பங்கேற்றோா்.(செய்தி முற்றும்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com