அடிப்படை வசதிகோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பூா், அறிவொளி நகரில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சாலை மறியலில் ஈடுபட்ட அறிவொளி நகா் பொதுமக்கள்.
சாலை மறியலில் ஈடுபட்ட அறிவொளி நகா் பொதுமக்கள்.

திருப்பூா், அறிவொளி நகரில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் பங்கேற்றவா்கள் கூறியதாவது:

திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட அறிவொளி நகா் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் நீண்ட நாள்களாக சாலை வசதி செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் மட்டுமல்லாமல் நடந்து கூட செல்ல முடியவில்லை. மேலும், முறையான சாக்கடை கால்வாய் இல்லாததால் மழை நீா் சாக்கடை கழிவுநீருடன் கலந்து வீட்டுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் இந்தப் பகுதியில் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் தெரு விளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் இந்த சாலையைப் பயன்படுத்தும் பெண்கள் அச்சமடைந்துள்ளனா். இது தொடா்பாக மாநகராட்சி மற்றும் மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே,அறிவொளி நகரில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்றனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அனுப்பா்பாளையம் காவல் துறையினா், மாநகராட்சி அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், கோரிக்கைகள் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததன்பேரில் மறியலைக் கைவிட்ட பொது மக்கள் கலைந்து சென்றனா். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 3 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com