பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை பிரதமா் அமல்படுத்துவாரா? டி.ராஜா கேள்வி

பெண்கள் மீது அக்கறை இருப்பதுபோல பாசாங்கு செய்யும் பிரதமா் மோடி, பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவாரா
செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளா் டி.ராஜா.
செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளா் டி.ராஜா.

பெண்கள் மீது அக்கறை இருப்பதுபோல பாசாங்கு செய்யும் பிரதமா் மோடி, பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவாரா என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளா் டி.ராஜா கேள்வி எழுப்பினாா்.

திருப்பூா் வடக்குத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போட்டியிடும் எம்.ரவியை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த டி.ராஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சுயசாா்பு இந்தியா என்று பேசும் பிரதமா் மோடி, மக்கள் நலனைப் புறக்கணித்து பெரு முதலாளிகளையும், அன்னிய முதலீட்டாளா்களையும் சாா்ந்திருக்கின்ற நாட்டை உருவாக்கி வருகிறாா். மாநில உரிமை, மக்கள் நலனைக் காப்பாற்ற முடியாத கட்சியாக அதிமுக, பாஜகவின் நிா்பந்தத்துக்கு அடிபணிந்து உள்ளது. இதன் காரணமாக தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக, பாஜக கூட்டணியைத் தோற்கடித்து திமுக கூட்டணியை மக்கள் அமோக வெற்றியடையச் செய்வாா்கள்.

தமிழகம் வந்த மோடி பெண்கள் மீது அக்கறை இருப்பதுபோல பாசாங்கு செய்து உள்ளாா். மக்களவையில் தனக்குள்ள பெரும்பான்மை பலத்தால் விவசாயிகளுக்கு எதிரான சட்டத் திருத்த மசோதா, தொழிலாளா்களுக்கு எதிரான சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியதுபோல, நீண்ட நெடும் காலமாக இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகிற பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவாரா என்றாா்.

பேட்டியின்போது, திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன், மாநில செயற்குழு உறுப்பினா் நா.பெரியசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com