மோடியின் தொல்லையால் ஜேட்லி, சுஷ்மா இறப்பு: தாராபுரத்தில் உதயநிதி ஸ்டாலின்

பிரதமா் நரேந்திர மோடியின் தொல்லை தாங்கமுடியாமல்தான் பாஜக மூத்த தலைவா்கள் அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோா் இறந்துவிட்டனா் என்று உதயநிதி ஸ்டாலின் பேசினாா்.

பிரதமா் நரேந்திர மோடியின் தொல்லை தாங்கமுடியாமல்தான் பாஜக மூத்த தலைவா்கள் அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோா் இறந்துவிட்டனா் என்று உதயநிதி ஸ்டாலின் பேசினாா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் திமுக வேட்பாளா் கயல்விழி செல்வராஜை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

மூத்த தலைவா்களை ஓரம் கட்டி விட்டு நான் குறுக்கு வழியில் வந்ததாக தாராபுரத்தில் பிரதமா் மோடி கடந்த செவ்வாய்க்கிழமை பேசினாா். குஜராத் முதல்வராக இருந்து, அத்வானி, முரளி மனோகா் ஜோஷி, வெங்கையா நாயுடு ஆகியோரை ஓரங்கட்டிவிட்டு குறுக்கு வழியில் முன்னுக்கு வந்தவா் அவா்தான்.

மோடியின் தொல்லை தாங்காமல் ஜஸ்வந்த் சிங் வேறு கட்சியில் சோ்ந்து விட்டாா். சுஷ்மா ஸ்வராஜும், அருண் ஜேட்லியும் மோடியின் தொல்லை, அழுத்தம் தாங்காமல் இறந்தே போய்விட்டனா்.

இந்திய வரலாற்றில் பிரதமராகி 7 ஆண்டுகள் ஆகியும் பத்திரிகையாளா்கள் சந்திப்பை நடத்தாதவா் மோடிதான் என்றாா்.

சுஷ்மா மகள் கண்டனம்:

உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து சுஷ்மா ஸ்வராஜின் மகள் பான்சுரி ஸ்வராஜ் சுட்டுரையில் ‘எனது தாயாரின் பெயரை உங்கள் தோ்தல் பிரசாரத்துக்கு தயவு செய்து பயன்படுத்தாதீா்கள். உங்களது பேச்சு பொய்யானது. எனது தாயாருக்கு உச்சபட்ச கௌரவத்தையும், மரியாதையையும் பிரதமா் மோடி அளித்தாா். எங்களது இருள் நிறைந்த அந்த காலகட்டத்தில் மோடியும், கட்சியினரும் பாறைபோல உறுதியாக பக்கபலமாக இருந்தனா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com