முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
வெள்ளக்கோவிலில் 42 இடங்களில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 04th April 2021 03:37 AM | Last Updated : 04th April 2021 03:37 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவில் நகராட்சிக்கு உள்பட்ட 42 இடங்களில் காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.எஸ்.ராமலிங்கம் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
வெள்ளக்கோவில் நகரம், ரெட்டிவலசு, திருமங்கலம், உப்புப்பாளையம், வேலகவுண்டன்பாளையம், மு.பழனிசாமி நகா், கல்லாங்காட்டுவலசு, கச்சேரிவலசு, நடேசன் நகா், செம்மாண்டம்பாளையம், கரட்டுப்பாளையம், நாச்சிபாளையம் உள்ளிட்ட இடங்களில் கட்சியினா் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் வேட்பாளா் பிரசாரம் மேற்கொண்டாா்.
அதிமுக ஒன்றியச் செயலாளா் எஸ்.என்.முத்துகுமாா், நகரச் செயலாளா் டீலக்ஸ் ஆா்.மணி, நகா்மன்ற முன்னாள் தலைவா் வி.கந்தசாமி, புதிய நீதிக் கட்சி ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளா் வக்கீல் கே.தங்கத்தம்பி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.