தாராபுரம் தொகுதி: இரு சுயேட்சை வேட்பாளர்கள் மீது நடவடிக்கை கோரி திமுக மனு

தாராபுரம் தனி தொகுதியில் எதிர்கட்சிகள் தூண்டுதலின்பேரில் ஆதாய நோக்கத்தில் போட்டியிடும் இரு பெண் சுயேட்சை வேட்பாளர்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தாராபுரம் தனி தொகுதியில் எதிர்கட்சிகள் தூண்டுதலின்பேரில் ஆதாய நோக்கத்தில் போட்டியிடும் இரு பெண் சுயேட்சை வேட்பாளர்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை தலைமை தேர்தல் ஆணையருக்கு, தாராபுரம் தொகுதி திமுக தலைமை முகவர் டி.சிவகுமார் அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது: தாராபுரம் தனி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் நா.கயல்விழி போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலில் திமுக வேட்பாளரின் பெயர், சின்னத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்தில் அதிமுக, பாஜகவினர் கயல்விழி என்ற பெயருடைய இருவேட்பாளர்களை ஆசை வார்த்தைகூறி நிறுத்தியுள்ளனர். 

இவர்கள் இருவரும் தங்களது வேட்பு மனுவில் ஒரே செல்லிடப்பேசி எண்ணைக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், கு.கயல்விழி என்பவர் கேட்டுப் பெற்றுள்ள சின்னம் பேனா. இந்த சின்னமானது போனா போல் இல்லாமல் முற்றிலும் மாறுபட்டு பேனாவைச்சுற்றிலும் கதிர்கள்போன்று உள்ளது. இந்த சின்னத்தை திடீரென்று பார்த்தால் உதயசூரியன் போல் தோற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. எதிர்க்கட்சிகள் வாக்காளர்கள் மத்தியில் சின்னம் போல் தோற்றமளிக்கும் வகையில் உள்ளது. 

எனவே, தன்னிச்சையாக தேர்தலில் போட்டியிடாமல் பிறரின் தூண்டுதலின்பேரில் ஆதாய நோக்கத்தில் கயல்விழி என்ற பெயரில் போட்டியிடும் இரு சுயோட்சை வேட்பாளர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com