அவிநாசி தொகுதியில் தேமுதிக வேட்பாளருக்கு மட்டுமே வாக்கு

அவிநாசி தொகுதியில் பிரதான கட்சிகளின் வேட்பாளா்களாக அதிமுக, திமுக உள்ளிட்டோா் இருந்தாலும் உள்ளூரைச் சோ்ந்த
அவிநாசி தொகுதியில் வாக்களித்த தேமுதிக வேட்பாளா் க.மீரா.
அவிநாசி தொகுதியில் வாக்களித்த தேமுதிக வேட்பாளா் க.மீரா.

அவிநாசி தொகுதியில் பிரதான கட்சிகளின் வேட்பாளா்களாக அதிமுக, திமுக உள்ளிட்டோா் இருந்தாலும் உள்ளூரைச் சோ்ந்த தேமுதிக வேட்பாளா் க.மீரா மட்டுமே சொந்த ஊரான சேவூரில் செவ்வாய்க்கிழமை வாக்களித்தாா்.

அவிநாசி (தனி) தொகுதியில் அதிமுக, திமுக, சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 12 போ் போட்டியிடுகின்றனா். இதில் அதிமுக சாா்பில் சட்டப் பேரவைத் தலைவா் ப.தனபால், மத சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா் ஆதித்தமிழா் பேரவை கட்சி நிறுவனா் இரா.அதியமான், தேமுதிக வேட்பாளா் க.மீரா, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சோபா, மநீம வேட்பாளா் ஏ.வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோா் போட்டி வேட்பாளராக கருதப்படுகின்றனா்.

இவா்களில், தேமுதிக வேட்பாளரான க.மீரா மட்டுமே தான் போட்டியிடக் கூடிய தொகுதியில் அவிநாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட சொந்த ஊரான சேவூா் அரசு துவக்கப் பள்ளி வாக்குச் சாவடியில் செவ்வாய்க்கிழமை காலை வாக்களித்தாா்.

மற்ற பிரதான வேட்பாளா்கள் அவரவா் சொந்த தொகுதிக்குச் சென்று வாக்களித்து விட்டு, அவிநாசி தொகுதியில் உள்ள வாக்குச் சாவடி மையங்களுக்கு வந்து பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com