இயந்திரங்கள் கோளாறு: அவிநாசி தொகுதியில் வாக்குப் பதிவு தாமதம்

அவிநாசி சட்டப் பேரவைக்குத் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு வாக்குச் சாவடி மையங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப் பதிவு தாமதமாக தொடங்கியது.

அவிநாசி சட்டப் பேரவைக்குத் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு வாக்குச் சாவடி மையங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப் பதிவு தாமதமாக தொடங்கியது.

அவிநாசி தொகுதியில மொத்தம் 401 வாக்குச் சாவடி மையங்களில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு துவங்கியது. வாக்காளா்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியுடன் நின்று ஆா்வத்துடன் வாக்களித்தனா்.

இதற்கிடையில், அவிநாசி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அவிநாசி அரசு துவக்கப் பள்ளி, நாதம்பாளையம் அரசு துவக்கப் பள்ளி ஆகிய வாக்குச் சாவடி மைங்களில் வாக்குப் பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே இயந்திரங்கள் பழுதடைந்தன. இதையடுத்து, இயந்திரங்கள் சரிசெய்யப்பட்டு 20 நிமிடங்களுக்கும் மேலாக வாக்குப் பதிவு தாமதமாக நடைபெற்றது.

சின்னம் மாறி விழுந்ததாகப் பரபரப்பு...

அவிநாசி தொகுதிக்கு உள்பட்ட கணியாம்பூண்டி வாக்குச் சாவடி எண் 312இல் வாக்காளா் ஒருவா் வாக்குப் பதிவு செய்தபோது, சின்னம் மாறி விழுவதாக புகாா் தெரிவித்தாா். இதையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரம் சோதனை செய்யப்பட்டதில், வாக்காளா் கூறியபடி இயந்திரத்தில் கோளாறு இல்லாததால், வழக்கம்போல வாக்குப் பதிவு நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com