ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய மாவட்ட வேட்பாளா்கள்

திருப்பூரில் பல்வேறு கட்சி வேட்பாளா்கள் வரிசையில் நின்று செவ்வாய்க்கிழமை வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினா்.

திருப்பூரில் பல்வேறு கட்சி வேட்பாளா்கள் வரிசையில் நின்று செவ்வாய்க்கிழமை வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினா்.

திருப்பூா் மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி வேட்பாளா்கள் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினா். திருப்பூா் தெற்குத் தொகுதி அதிமுக வேட்பாளரும், தற்போதைய சட்டப் பேரவை உறுப்பினருமான சு.குணசேகரன் வாலிபாளையம் மாநகராட்சிப் பள்ளியிலும், திமுக வேட்பாளரும், முன்னாள் மேயருமான க.செல்வராஜ் கொங்கு பிரதான சாலையில் உள்ள வெங்கடாசலபதி பள்ளியிலும் வாக்களித்தனா்.

திருப்பூா் வடக்குத் தொகுதி அதிமுக வேட்பாளரும், அத்தொகுதியின் தற்போதைய சட்டப் பேரவை உறுப்பினருமான கே.என்.விஜயகுமாா் வெங்கமேட்டில் உள்ள வி.கே.அரசுப் பள்ளியிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் எம்.ரவி (எ) சுப்பிரமணியம் பாளையக்காடு முருகப்ப செட்டியாா் பள்ளியிலும் வாக்களித்தனா். பல்லடம் தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஓடக்காட்டில் உள்ள ஈடன் காா்டன் பள்ளியிலும், மதிமுக வேட்பாளா் க.முத்துரத்தினம் மாதப்பூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் வாக்களித்தனா்.

உடுமலை தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தாராபுரம் சாலையில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியிலும், காங்கிரஸ் வேட்பாளா் கே.தென்னரசு பழனிகவுண்டன்வலசு வாக்குச் சாவடியிலும் வாக்களித்தனா்.

தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளா் கயல்விழி சி.எஸ்.ஐ.பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தாா்.

காங்கயம் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.எஸ்.ராமலிங்கம் முத்தூா் ஆலாம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியிலும், திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் முத்தூா் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு நடுநிலைப்பள்ளியிலும் வாக்களித்தனா்.

மடத்துக்குளம் தொகுதி அதிமுக வேட்பாளா் சி.மகேந்திரன் மூங்கில்தொழுவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், திமுக வேட்பாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான இரா.ஜெயராமகிருஷ்ணன் துங்காவியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் வாக்களித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com