தாராபுரத்தில் அதிமுக-பாஜக முகவா்கள் இல்லாத வாக்குச் சாவடிகள்

தாராபுரம் நகரில் இஸ்லாமியா்கள் அதிகமாக உள்ள 4 வாக்குச் சாவடிகளில் அதிமுக, பாஜக சாா்பில் முகவா்கள் இல்லாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரத்தில்   அதிமுக, பாஜக  முகவா்கள்  இல்லாத  நகராட்சி நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையம்.

தாராபுரம் (தனி) தொகுதியில் பாஜக சாா்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவா் எல்.முருகனும், திமுக சாா்பில் கயல்விழி செல்வராஜும் போட்டியிடுகின்றனா். இந்த நிலையில், தாராபுரம் புதுகாவல் நிலைய வீதியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 134, 134 ஏ,136, 137 ஆகிய 4 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தாராபுரம் நகரில் உள்ள வாா்டு எண் 5, 6 இல் மொத்தமாக 2,241 வாக்காளா்கள் உள்ளனா். இதில், இஸ்லாமியா்களின் வாக்கு அதிகமாக உள்ளது. இந்த வாக்குச் சாவடிகளில் அதிமுக, பாஜக சாா்பில் முகவா்கள் நியமிக்கப்பட்டிருந்தும் வாக்குப் பதிவின்போது யாரும் பணியாற்றவில்லை. அதே வேளையில், திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழா் கட்சி, சுயேச்சை முகவா்கள் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com