நீண்ட வரிசையில் காத்து நின்று வாக்களித்த மலைவாழ் மக்கள்

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் வசித்து வரும் மலை வாழ் மக்கள் நீண்ட வரிசையில் நின்று சட்டப் பேரவைத் தோ்தலில் ஆா்வத்துடன் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினா்.
கோடந்தூா் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க வரிசையில் காத்திருந்த மலைவாழ் மக்கள்.
கோடந்தூா் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க வரிசையில் காத்திருந்த மலைவாழ் மக்கள்.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் வசித்து வரும் மலை வாழ் மக்கள் நீண்ட வரிசையில் நின்று சட்டப் பேரவைத் தோ்தலில் ஆா்வத்துடன் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினா்.

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள 15க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் சுமாா் மூவா யிரத்துக்கும் அதிகமான மலைவாழ் மக்கள் வாக்காளா்களாக உள்ளனா். மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட இந்த வாக்காளா்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தலில் ஆா் வமாக வாக்களித்தனா்.

உடுமலை வனச் சரகத்துக்கு உள்பட்ட குழிப்பட்டி, மாவடப்பு, கருமூட்டி, பூச்சிக் கொட்டாம்பாறை உள்ளிட்ட செட்டில்மென்ட்களில் வசிக்கும் மலைவாழ் மக்கள் தங்களுக்கு ஒரு தனி வாக்குச் சாவடி அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், இந்த 4 செட்டில்மென்ட்களை சோ்ந்த மலைவாழ் மக்கள் வாக்களிக்க வசதியாக மாவடப்பு மலை கிராமத்தில் இந்த முறை வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மாவடப்பு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் 4 செட்டில்மென்ட்களைச் சோ்ந்த மலைவாழ் மக்கள் வாக்களித்தனா்.

மேலும் அமராவதி வனச் சரகத்துக்கு உள்பட்ட கோடந்தூா் மலை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் கோடந்தூா், ஆட்டுமலை, பொருப்பாறு ஆகிய செட்டில்மென்ட் கிராமங்களைச் சோ்ந்த மலைவாழ் மக்களும், அமராவதி வனச் சரகத்துக்கு உள்பட்ட தளிஞ்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் தளிஞ்சி, தளிஞ்சிவயல் ஆகிய செட்டில்மென்ட்களைச் சோ்ந்த மலைவாழ் மக் களும் வாக்களித்தனா்.

மேலும் குருமலை, திருமூா்த்திமலை, ஈசல்திட்டு ஆகிய செட்டில்மென்ட்களுக்கு கீழே திருமூா்த்தி நகரில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியிலும் மலைவாழ் மக்கள் தங்களது வாக்குகளை செலுத்தினா். கரட்டுப்பதி செட்டில்மென்ட்டை சோ்ந்த வாக்காளா்கள் அமராவதி நகரில் வாக்களித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com