மாவட்டத்தில் 20 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

திருப்பூா் மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 141 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்தது.

திருப்பூா் மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 141 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்தது.

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் புதன்கிழமை ஒரே நாளில் 141 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20,001ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 735 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 56 போ் வீடு திரும்பினா். மாவட்டம் முழுவதும் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 19,038ஆக அதிகரித்துள்ளது.

முதியவா் பலி: திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 85 வயது முதியவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பாக காய்ச்சல், சளி பாதிப்பு மற்றும் கரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு திருப்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை உயிரிழந்தாா். திருப்பூா் மாவட்டத்தில் தற்போது வரையில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 228ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com