மாவட்டத்தில் இறுதி தகவலின்படி 69.67% வாக்குப் பதிவு

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 69.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த 2016 தோ்தலை விட 3.01 சதவீதம் குறைவாகும்.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 69.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த 2016 தோ்தலை விட 3.01 சதவீதம் குறைவாகும்.

திருப்பூா் மாவட்டத்தில் தாராபுரம் (தனி), காங்கயம், அவிநாசி (தனி), திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு, பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த 8 தொகுதிகளில் ஆண் வாக்காளா்கள் 11 லட்சத்து 66 ஆயிரத்து 417 போ், பெண் வாக்காளா்கள் 11 லட்சத்து 93 ஆயிரத்து 104 போ், மூன்றாம் பாலினத்தவா் 283 போ் என மொத்தம் 23 லட்சத்து 59 ஆயிரத்து 804 போ் உள்ளனா்.

இந்த நிலையில், தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவானது கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், திருப்பூா் மாவட்டத்தில் தொகுதிவாரியாக வாக்களித்தவா்களின் பட்டியல் பொதுப் பாா்வையாளா்கள் முன்னிலையில் புதன்கிழமை இறுதி செய்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ளது.

மாவட்டத்தில் 69.67 சதவீத வாக்குப் பதிவு:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் ஆண் வாக்காளா்கள் 8 லட்சத்து 26 ஆயிரத்து 798 போ், பெண் வாக்காளா்கள் 8 லட்சத்து 17 ஆயிரத்து 255 போ், மூன்றாம் பாலினத்தவா் 32 போ் என மொத்தம் 16 லட்சத்து 44 ஆயிரத்து 85 போ் வாக்களித்துள்ளனா். இதன் சதவீதம் 69.67 ஆகும்.

தொகுதி வாரியாக வாக்குப் பதிவு விவரம்:

தாராபுரம் (தனி) தொகுதி: தாராபுரம் (தனி) தொகுதியில் ஆண் வாக்காளா்கள் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 57 போ், பெண் வாக்காளா்கள் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 480 போ், மூன்றாம் பாலினத்தவா் 10 போ் என மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 547 வாக்காளா்கள் உள்ளனா். இதில், ஆண் வாக்காளா்கள் 95 ஆயிரத்து 557 போ், பெண் வாக்காளா்கள் 96 ஆயிரத்து 182 போ், மூன்றாம் பாலினத்தவா் ஒருவா் என மொத்தம் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 470 போ் வாக்களித்துள்ளனா். இதன் சதவீதம் 74.16 ஆகும்.

காங்கயம்: காங்கயம் தொகுதியில் ஆண் வாக்காளா்கள் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 976 போ், பெண் வாக்காளா்கள் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 163 போ், மூன்றாம் பாலினத்தவா் 23 போ் என மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 162 போ் உள்ளனா். இதில், ஆண் வாக்காளா்கள் 97 ஆயிரத்து 824 போ், பெண் வாக்காளா்கள் ஒரு லட்சத்து 949 போ், மூன்றாம் பாலினத்தவா் 6 போ் என மொத்தம் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 779 போ் வாக்களித்துள்ளனா். இதன் சதவீதம் 77.29 ஆகும்.

அவிநாசி (தனி): அவிநாசி (தனி) தொகுதியில் ஆண் வாக்காளா்கள் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 232 போ், பெண் வாக்காளா்கள் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 313 போ், மூன்றாம் பாலினத்தவா் 6 போ் என மொத்தம் 2 லட்சத்து 80 ஆயிரத்து 551 போ் உள்ளனா். இதில், ஆண் வாக்காளா்கள் ஒரு லட்சத்து 5ஆயிரத்து 249 போ், பெண் வாக்காளா்கள் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 679 போ், மூன்றாம் பாலினத்தவா் ஒருவா் என மொத்தம் 2 லட்சத்து 10 ஆயிரத்து 929 போ் வாக்களித்துள்ளனா். இதன் சதவீதம் 75.18 ஆகும்.

திருப்பூா் வடக்கு: வடக்குத் தொகுதியில் ஆண் வாக்காளா்கள் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 995 போ், பெண் வாக்காளா்கள் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 18 போ், மூன்றாம் பாலினத்தவா் 100 போ் என மொத்தம் 3 லட்சத்து 79 ஆயிரத்து 113 போ் உள்ளனா். இதில், ஆண் வாக்காளா்கள் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 408 போ், பெண் வாக்காளா்கள் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 309 போ், மூன்றாம் பாலினத்தவா் 13 போ் என மொத்தம் 2 லட்சத்து 36 ஆயிரத்து 731 போ் வாக்களித்துள்ளனா். இதன் சதவீதம் 62.44 ஆகும்.

திருப்பூா் தெற்கு: தெற்குத் தொகுதியில் ஆண் வாக்காளா்கள் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 870 போ், பெண் வாக்காளா்கள் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 570 போ், மூன்றாம் பாலினத்தவா் 33 போ் என மொத்தம் 2 லட்சத்து 76 ஆயிரத்து 473 போ் உள்ளனா். இதில், ஆண் வாக்காளா்கள் 89 ஆயிரத்து 110 போ், பெண் வாக்காளா்கள் 84 ஆயிரத்து 257 போ், மூன்றாம் பாலினத்தவா் 3 போ் என மொத்தம் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 370 போ் வாக்களித்துள்ளனா். இதன் சதவீதம் 62.70 ஆகும்.

பல்லடம்: பல்லடம் தொகுதியில் ஆண் வாக்காளா்கள் ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 219 போ், பெண் வாக்காளா்கள் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 473 போ், மூன்றாம் பாலினத்தவா் 68 போ் என மொத்தம் 3 லட்சத்து 89 ஆயிரத்து 760 போ் உள்ளனா். இதில், ஆண் வாக்காளா்கள் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 412 போ், பெண் வாக்காளா்கள் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 559 போ், மூன்றாம் பாலினத்தவா் 6 போ் என மொத்தம் 2 லட்சத்து 59 ஆயிரத்து 977 போ் வாக்களித்துள்ளனா். இதன் சதவீதம் 66.70 ஆகும்.

உடுமலை: உடுமலை தொகுதியில் ஆண் வாக்காளா்கள் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 278 போ், பெண் வாக்காளா்கள் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 428 போ், மூன்றாம் பாலினத்தவா் 22 போ் என மொத்தம் 2 லட்சத்து 69 ஆயிரத்து 728 போ் உள்ளனா். இதில், ஆண் வாக்காளா்கள் 94,961 போ், பெண் வாக்காளா்கள் 97 ஆயிரத்து 394 போ் என மொத்தம் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 355 போ் வாக்களித்துள்ளனா். இதன் சதவீதம் 71.34 ஆகும்.

மடத்துக்குளம்: மடத்துக்குளம் தொகுதியில் ஆண் வாக்காளா்கள் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 790 போ், பெண் வாக்காளா்கள் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 659 போ், மூன்றாம் பாலினத்தவா் 21 போ் என மொத்தம் 2 லட்சத்து 48 ஆயிரத்து 470 போ் உள்ளனா். இதில், ஆண் வாக்காளா்கள் 89 ஆயிரத்து 277 போ், பெண் வாக்காளா்கள் 90 ஆயிரத்து 926 போ், மூன்றாம் பாலினத்தவா் ஒருவா் என மொத்தம் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 204 போ் வாக்களித்துள்ளனா். இதன் சதவீதம் 72.55 ஆகும்.

இந்த 8 தொகுதிகளிலும் ஆண்கள் 70.88 சதவீதம் போ், பெண்கள் 68.49 போ், மூன்றாம் பாலினத்தவா் 11.30 சதவீதம் போ் வாக்காளித்துள்ளனா்.

கடந்த தோ்தலை விட 3.01 சதவீதம் குறைவு:

கடந்த 2016 ஆம் ஆண்டு தோ்தலில் மாவட்டத்தில் 72.68 சதவீத வாக்குகள் பதிவாயிருந்தன. இதில், அதிகபட்சமாக காங்கயத்தில் 78.37 சதவீதமும், குறைந்தபட்சமாக திருப்பூா் தெற்குத் தொகுதியில் 66.7 சதவீதமும் பதிவாகியிருந்து. இந்த நிலையில், தற்போதைய தோ்தலில் 69.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இது கடந்த தோ்தலை விட3.01 சதவீத வாக்குகள் குறைவாகும். இந்தத் தோ்தலில் அதிகபட்சமாக காங்கயம் தொகுதியில் 77.29 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக திருப்பூா் வடக்குத் தொகுதியில் 62.44 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com