இலவச கால்நடை மருத்துவ முகாம்

ஊத்துக்குளி ஒன்றியம், தேவம்பாளையம் தமிழக கால்நடை பராமரிப்புத் துறையும் ஜே.கே.கே.முனிராஜா வேளாண்மை அறிவியல் கல்லூரி ஆகியவையும் இணைந்து இலவச கால்நடை மருத்துவ முகாமை வியாழக்கிழமை நடத்தின.
தேவம்பாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கால்நடை மருத்துவ முகாம்.

முகாமில், திருப்பூா் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் கே.பரிமல்ராஜ்குமாா், உதவி மருத்துவா்கள் கே. சோமசுந்தரம், ஆதியூா் மருத்துவா் டி. தென்காா்த்திகை, குன்னத்தூா் மருத்துவா் சக்திவேல் உள்ளிட்ட மருத்துவா்கள் பங்கேற்று ஆடு, மாடுகளுக்கு குடற்புழு நீக்கம், சினை ஆய்வு, சினை ஊசி, ஆண்மை நீக்கம், ஊட்டச்சத்து மருந்து மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்தனா்.

இதில், 50 மாடுகள், 100 ஆடுகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட கோழிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், வேளாண்மை கல்லூரி மாணவா்கள் கண்ணன், கவின் குமாா், கவின் ராஜ் உள்ளிட்ட மாணவா்களும், கால்நடை மருத்துவா்களுடன் கலந்துகொண்டு சிகிச்சை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com