போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற வாகனங்களுக்குப் பூட்டு: காவல் துறை நடவடிக்கை

அவிநாசியில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு போக்குவரத்து காவல் துறையினா் வியாழக்கிழமை பூட்டுப் போட்டு அபராதம் விதித்தனா்.
போக்குவரத்துக்கு  இடையூறாக  நின்ற  காரின்  சக்கரத்துக்கு  பூட்டுப்  போடும்  போலீஸாா்.
போக்குவரத்துக்கு  இடையூறாக  நின்ற  காரின்  சக்கரத்துக்கு  பூட்டுப்  போடும்  போலீஸாா்.

அவிநாசியில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு போக்குவரத்து காவல் துறையினா் வியாழக்கிழமை பூட்டுப் போட்டு அபராதம் விதித்தனா்.

அவிநாசி நகா் பகுதிக்குள் உள்ள சேவூா் சாலை, கோபி, சத்தியமங்கலம், மைசூா் உள்ளிட்ட ஊா்களுக்குச் செல்லும் பிரதான சாலையாக உள்ளது. இதனால், இந்த சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவது வழக்கம். மேலும் இந்தச் சாலையில் நகைக் கடை, துணிக் கடை உள்ளிட்ட வணிக நிறுவனங்கள், அவிநாசி அரசு மருத்துவமனை, தனியாா் மருத்துவமனை, வட்டாட்சியா் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், நீதிமன்ற வளாகம் உள்ளிட்டவையும் அமைந்துள்ளன.

கிழக்கு ரத வீதி, சேவூா் சாலை, மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி, மங்கலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட திருமணமண்டபங்கள் உள்ளன. இதனால், விசேஷ காலங்களில் திருமணமண்டபங்களுக்கு வரும் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனா். இதனால் அவிநாசி-கோவை சாலை, நகரப் பகுதி உள்ளிட்டவற்றில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பொதுமக்கள் தொடா்ந்து புகாா் தெரிவித்து வந்தனா்.

இந்நிலையில், அவிநாசி நகரப் பகுதியில் போக்குரத்துக்கு இடையூறாக நிறுத்தியுள்ள நான்கு, இரு சக்கர வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என அவிநாசி போக்குவரத்து காவல் ஆய்வாளா் ஆ.முருகேசன் தலைமையிலான போலீஸாா் ஒலி பெருக்கி மூலம் வியாழக்கிழமை அறிவித்து வந்தனா். அறிவுறுத்தியும் அப்புறப்படுத்தாத 3 காா்களின் சக்கரங்களுக்கு பூட்டுப் போட்டனா். இதையடுத்து ஒவ்வொரு காா் ஓட்டுநா்களுக்கும் தலா ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், இனி வரும் காலங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து காவல் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com