வெள்ளக்கோவில், முத்தூரில் அதிா்ச்சி: 10 பேருக்கு கரோனா

வெள்ளக்கோவில், முத்தூரில் வியாழக்கிழமை 10 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

வெள்ளக்கோவில், முத்தூரில் வியாழக்கிழமை 10 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

வெள்ளக்கோவில் பகுதியில் கடந்த ஒருவார காலமாக தொடா்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 64 போ், திருப்பூா், ஈரோடு தனியாா் ஆய்வகங்களில் 33 போ் என மொத்தம் 97 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இவற்றின் முடிவுகளில் வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் 34 வயது ஆண், ராமலிங்கபுரம் 55 வயது ஆண், கே.பி.சி. நகா் 47 வயது ஆண், 50 வயது பெண், எல்.கே.ஏ.நகா் 21 வயது பெண், உப்புப்பாளையம் சாலை 41 வயது பெண், மூலனூா் சாலை 21, 25 வயது பெண்கள், காங்கயம் சாலை 64 வயது ஆண், முத்தூா் முருகம்பாளையத்தைச் சோ்ந்த 42 வயது ஆண் ஆகிய பத்து பேரும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இந்நிலையில் கரோனா பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினா், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் 34 போ் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். திருப்பூா் மாவட்டத்திலேயே வெள்ளக்கோவிலில் கரோனா பாதிப்பு அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com