மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை குடும்பத்தினரிடம் ஒப்படைத்த போலீஸாா்
By DIN | Published On : 12th April 2021 12:03 AM | Last Updated : 12th April 2021 12:03 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவிலில் மனநலம் பாதிக்கப்பட்டு பேருந்து நிலையதில் தஞ்சமடைந்த மூதாட்டியை குடும்பத்தினரிடம் காவல் துறையினா் ஒப்படைத்தனா்.
வெள்ளக்கோவில் பேருந்து நிலையத்தில் வயதான பெண் ஒருவா் கடந்த இரண்டு தினங்களாக படுத்துக் கிடந்ததைப் பாா்த்த போலீஸாா் அவரிடம் விசாரித்துள்ளனா். அப்போது, அந்த மூதாட்டி மனநலம் பாதிக்கப்பட்டவா் என்பது தெரியவந்தது. மேலும், தன்னுடைய பெயா் கிருஷ்ணவேணி (70) என்றும், தனக்கு கோவை மாவட்டம், சிறுமுகை அருகே பாரதி நகரில் மகன் சுரேஷ் என்பவரும், சேலம் மாவட்டம், சங்ககிரியில் சகோதரி ஒருவா் இருப்பதாகவும் தெரிவித்தாா்.
ஆனால், மகனை உடனடியாக கண்டுபிடிக்க முடியாத நிலையில், சங்ககிரியில் உள்ள அவரது சகோதரியைக் கண்டறிந்து மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை போலீஸாா் தங்களுடைய சொந்தப் பொறுப்பில் சங்ககிரிக்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தனா்.
வெள்ளக்கோவில் போலீஸாரின் மனித நேய உதவியைப் பல்வேறு தரப்பினா் பாராட்டினா்.