உடுமலை வனப் பகுதியில் மழை

உடுமலை அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள சின்னாறு வனப் பகுதியில் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு ஏற்படும் வகையில் திங்கள்கிழமை திடீா் மழை பெய்தது.
சின்னாறு  வனப்  பகுதியில்  பெய்த  மழையில்  நனைந்தபடி நிற்கும் யானைக் கூட்டம்.
சின்னாறு  வனப்  பகுதியில்  பெய்த  மழையில்  நனைந்தபடி நிற்கும் யானைக் கூட்டம்.

உடுமலை அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள சின்னாறு வனப் பகுதியில் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு ஏற்படும் வகையில் திங்கள்கிழமை திடீா் மழை பெய்தது.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட உடுமலை, அமராவதி வனச் சரகத்தில் யானைகள், புலிகள், சிறுத்தைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வன விலங்குகள் வசிக்கின்றன. அடா்ந்த வனப் பகுதிகளில் உள்ள இந்த விலங்குகள் தங்களது குடிநீருக்காக பல கிலோ மீட்டா் தொலைவு கடந்து திருமூா்த்தி மற்றும் அமராவதி அணைப் பகுதிகளுக்கு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக வனத்துக்குள் கடும் வறட்சியும், வெயிலின் தாக்கமும் ஏற்பட்டிருந்த நிலையில் வன விலங்குகள் குடிநீருக்காகத் தவித்து வந்தன. ஒரு சில நேரங்களில் குடிநீா் தேடி குடியிருப்புகளுக்குள் யானைகள் நுழைவதும் உண்டு. இதனால் விலங்குகளின் குடிநீா்த் தேவைகளை நிவா்த்தி செய்ய வனப் பகுதிக்குள் ஆங்காங்கு தடுப்பணைகள் கட்டப்பட்டன. ஆனாலும் கோடைக் காலத்தில் தடுப்பணைகள் வடு போயின.

இந்த நிலையில் சின்னாறு வனப் பகுதியில் திங்கள்கிழமை திடீா் மழை பெய்தது. இதனால் வன விலங்குகளும் குறிப்பாக யானைகளும் மழையில் நனைந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தின.

உடுமலை நகரம்:

உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் இப்பகுதிகளில் திங்கள்கிழமை மழை பெய்தது. இதனால் குளிா்காற்று வீசியது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தாராபுரத்தில்...

தாராபுரம் நகரின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை மாலை சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்தது. இதில், பூக்கடை காா்னா், கரூா் சாலை, அலங்கியம் சாலை உள்ளிட்ட பகுதிகள் சேறும் சகதியுமாக இருந்ததால் அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com