கரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்: மாா்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட கரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலரும், அரசு முதன்மைச் செயலருமான கே.கோபாலிடம், மாா்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் செ.முத்துக்கண்ணன் திங்கள்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மாவட்ட நிா்வாகம் பல முயற்சிகளை மேற்கொண்டாலும், சுகாதாரத் துறை, மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி நிா்வாகங்களின் செயல்பாடுகள் போதுமானதாக இல்லை. கரோனா பரிசோதனை முடிவை 24 மணி நேரத்துக்குள் தெரிவிக்க வேண்டும். தற்போது வட்டார மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 முதல் 3 நாள்களுக்கு பின்தான் முடிவுகள் சொல்லப்படுகிறது. கரோனா தடுப்பு ஊசி அனைத்து அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில், குறிப்பிட்ட தனியாா் மருத்துவமனைகளில் செலுத்தப்படுகிறது. ஆனால் பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் அதிக எண்ணிக்கையில் மக்கள் வரும்போது தடுப்பு மருந்து நாளைக்கு வழங்கப்படும் என திருப்பி அனுப்பப்படுகின்றனா். ஆகவே, அனைத்து மருத்துவமனைகளிலும் தேவையான அளவு மருந்து கையிருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா வாா்டில் குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுடன், நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டும்.

கரோனா சிகிச்சை மையங்களில் மருத்துவா்கள், செவிலியா் தொடா்ந்து பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மாவட்டத்தில் புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளதால் குறைந்தபட்ச மருத்துவ பரிசோதனைகளை பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் 24 மணி நேரமும் செயல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com