சேவூரில் ரூ.2.20 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.20 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.20 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 70 மூட்டைகள் வரத்து இருந்தது.

முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ரூ.7,180 முதல் ரூ.7, 250 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.6,800 முதல் ரூ.6,900 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.6,180 முதல் ரூ.6,300 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.2.20 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் 8 வியாபாரிகள், 14 விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com