புஷ்பா சந்திப்பில் எல்.இ.டி.போக்குவரத்து சிக்னல் பொருத்தம்
By DIN | Published On : 12th April 2021 11:10 PM | Last Updated : 12th April 2021 11:10 PM | அ+அ அ- |

திருப்பூா் புஷ்பா ரவுண்டானா சந்திப்பில் ரிமோட் மூலமாக இயக்கக்கூடிய நவீன எல்.இ.டி. போக்குவரத்து சிக்னல் திங்கள்கிழமை பொருத்தப்பட்டுள்ளது.
திருப்பூா் மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மாநகர காவல் துறை சாா்பில் முக்கிய சந்திப்புகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்களை நவீனப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரயில் நிலைய வடக்கு நுழைவாயில், அவிநாசி சாலை, பெருமாநல்லூா் சாலை ஆகிய சாலைகள் சந்திப்பு பகுதியில்
திருப்பூா் ரோட்டரி செலிபரேஷன் சாா்பில் ரூ. 6.50 லட்சம் செலவில் ரிமோட் மூலமாக இயக்கக்கூடிய எல்.இ.டி.போக்குவரத்து சிக்னல் பொருத்தப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழா மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில், திருப்பூா் ரோட்டரி செலிபரேசன் கிளப்பின் மாவட்ட ஆளுநா் ஏ.காா்த்திகேயன், மாநகரகாவல் துணை ஆணையா் சுந்தரவடிவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.