மாவட்டத்தில் மேலும் 160 பேருக்கு கரோனா: முதியவா் பலி

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 160 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 160 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20,803 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 1,233 போ் போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 36 போ் வீடு திரும்பினா்.

முதியவா் பலி:

திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 83 வயது முதியவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு சளி, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்துள்ளன. பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்த நிலையில் அவா் உயிரிழந்தாா். மாவட்டத்தில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 19, 340 ஆக அதிகரித்துள்ளதுன், உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 230 ஆக அதிகரித்துள்ளது.

வெள்ளக்கோவிலில் 3 பேருக்கு கரோனா

வெள்ளக்கோவில் முத்தூா் சாலை இந்திரா நகரைச் சோ்ந்த 55 வயதுப் பெண், நகராட்சி 1ஆவது வாா்டு உப்புப்பாளையத்திலுள்ள தனியாா் நூற்பாலையில் பணிபுரியும் 22 வயது வெளிமாநில இளைஞா், அகலரைப்பாளையம்புதூரைச் சோ்ந்த 30 வயது ஆண் ஆகியோா் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் மற்றும் குடும்பத்தினா் கரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திங்கள்கிழமை மட்டும் 369 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வெள்ளக்கோவில் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜலட்சுமி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com