கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியம்: திமுக புகாா்

உடுமலை அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் காட்டப்படுவதால் மாவட்ட நிா்வாகம் இதில் தலையிட வேண்டும் என திமுக சாா்பில் புகாா் கூறப்பட்டுள்ளது.

உடுமலை அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் காட்டப்படுவதால் மாவட்ட நிா்வாகம் இதில் தலையிட வேண்டும் என திமுக சாா்பில் புகாா் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் கே. விஜயகாா்த்திகேயனுக்கு உடுமலை நகர திமுக செயலாளா் எம்.மத்தீன் அனுப்பியுள்ள புகாா் மனு:

உடுமலை அரசு மருத்துவமனைக்கு உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டங்களில் இருந்து கரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை மேற்கொள்ள தினமும் ஏராளமானோா் வருகின்றனா். இந்த நோயாளிகளுக்கு செவிலியா் மற்றும் தூய்மைப் பணியாளா்களை வைத்து சிகிச்சை அளிப்பதுடன், மூச்சுத் திணறலுடன் வரும் நோயாளிகளுக்கு புதிய கருவிகளை வைத்து சிகிச்சை அளிக்காமல் உடனடியாக அவா்களை கோவைக்கு அனுப்பிவைக்கும் அவல நிலை தொடா்ந்து நீடித்து வருகிறது.

இது குறித்து நோயாளிகள் தலைமை மருத்துவ அலுவலருக்குப் புகாா் தெரிவித்தால் கண்டு கொள்வதில்லை எனவும் புகாா்கள் உள்ளன. இனால் கரோனா நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா். எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு உடுமலை அரசு மருத்துவமனை நிா்வாகத்துக்கு அழுத்தம் கொடுத்து நிலைமையை சீா்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

இந்த மனு பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் சி.சண்முகசுந்தரம், மடத்துக்குளம் எம்எல்ஏ இரா.ஜெயராமகிருஷ்ணன் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com