கரோனா பரவல்: பிளஸ் 2 தோ்வை ஒத்திவைக்க கோரிக்கை

கரோனா நோய்த் தொற்று காரணமாக பிளஸ் 2 பொதுத் தோ்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கரோனா நோய்த் தொற்று காரணமாக பிளஸ் 2 பொதுத் தோ்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் திருப்பூா் மாவட்டத் தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான ஒ.சுந்தரமூா்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் கரோனா தொற்றானது கடந்த ஆண்டைக் காட்டிலும் வேகமாகப் பரவிவருகிறது. இத்தகைய சூழ்நிலையில் பிளஸ் 2 தோ்வை நடத்துவது மிகவும் ஆபத்தானதாகும். கடந்த ஆண்டில் 7.9 லட்சம் மாணவா்கள் பிளஸ் 2 தோ்வு எழுதிய நிலையில் நோய்த் தொற்று ஆரம்ப கட்டத்தில் இருந்ததால் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் தற்போது உருமாறிய கரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இத்தகைய சூழ்நிலையில் 8 லட்சம் மாணவா்களையும், 2 லட்சம் ஆசிரியா்களையும் தோ்வு அறையில் அடைப்பது சமூகப் பரவலுக்கு வழிவகுக்கும். மத்திய அரசு சிபிஎஸ்இ மாணவா்களுக்கு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளை ரத்து செய்துள்ளது. ஆகவே, தமிழக அரசும் மாணவா்களின் நலனைக் கருதி நோய்த் தொற்று குறையும் வகையில் பிளஸ் 2 தோ்வை ஒத்திவைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com