மாவட்டத்தில் மேலும் 227 பேருக்கு கரோனா

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 227 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 227 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 21,647 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் 1,695 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 98 போ் வீடு திரும்பினா். மாவட்டத்தில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 19, 721 ஆக அதிகரித்துள்ளதுடன், தற்போது வரையில் 231 போ் உயிரிழந்துள்ளனா். திருப்பூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பாதிப்பு எண்ணிக்கை

200ஐ கடந்து வருகிறது. ஆகவே, பொது வெளியில் நடமாடும் அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

வெள்ளக்கோவிலில் 4,056 பேருக்கு கரோனா தடுப்பூசி:

வெள்ளக்கோவில் பகுதியில் இதுவரை முன்களப் பணியாளா்கள், பொது மக்கள் என மொத்தம் 4,056 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நூற்பாலைகளில் வெளிமாநிலத் தொழிலாளா்கள் மத்தியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இவா்கள் ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதும், பொதுவான கழிவறை, குளியலறைகள் இருப்பதும் நோய்த் தொற்றுக்கு காரணமாக உள்ளன.

இந்நிலையில் வெள்ளக்கோவிலில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இப்பகுதியில் நோய்த் தொற்றைத் தடுக்க சுகாதாரத் துறையினா் நூற்பாலைகளுக்கு நேரடியாகச் சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com