முத்தூரில் ரூ.18 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை விற்பனை

முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 18 லட்சத்துக்கு வேளாண் விளை பொருள்கள் விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.

முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 18 லட்சத்துக்கு வேளாண் விளை பொருள்கள் விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த விற்பனைக் கூடத்தில் தேங்காய், கொப்பரை, எள் விற்பனை சனிக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் 7,029 கிலோ எடையுள்ள 20,187 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. ஒரு கிலோ ரூ. 27.25 முதல் ரூ. 36.20 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ. 35.15. மொத்தம் 2,329 கிலோ கொப்பரை விற்பனைக்கு வந்திருந்தது. ஒரு கிலோ ரூ. 83.40 முதல் ரூ. 124.15 வரை ஏலம் போனது. சராசரி விலை கிலோ ரூ. 121.60.

எள் வரத்து 14,157 கிலோ இருந்தது. இதில் கருப்பு எள் கிலோ ரூ. 110.09, சிவப்பு எள் ரூ. 104.75 வரை விற்பனையானது. தேங்காய், கொப்பரை, எள் ஆகியவை மொத்தம் 23.51 டன் விற்பனையாயின. மொத்தம் 235 விவசாயிகள், 27 வணிகா்கள் வந்திருந்தனா். விற்பனைத் தொகை ரூ. 18 லட்சத்து 33 ஆயிரத்து 664 விற்பனைக் கூட அதிகாரி ஸ்ரீரங்கன் முன்னிலையில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com