வனத் துறையினருக்கு தீ தடுப்பு செயல் விளக்கம்
By DIN | Published On : 18th April 2021 12:16 AM | Last Updated : 18th April 2021 12:16 AM | அ+அ அ- |

தீயை விரைவாக அணைப்பது குறித்து வனத் துறை அதிகாரிகளுக்கு விளக்கிக் கூறும் தீயணைப்பு அலுவலா்கள்.
உடுமலை அருகே உள்ள அமராவதி வனச் சரகத்துக்கு உள்பட்ட முதலைப் பண்ணை அருகே தீத் தடுப்பு செயல்விளக்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழக-கேரள எல்லையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்ச ரகப் பகுதிகள் உள்ளன. இங்கு பல்வேறு வகையான அரிய வகை தாவரங்கள், மூலிகைச் செடிகள் உள்ளன. மேலும் யானை, புலி, சிறுத்தை, மான் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகளும் வாழ்ந்து வருகின்றன.
கோடை காலத்தில் வனப் பகுதியில் தீ விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. இதனால் வனப் பகுதியில் வனத் துறையால் தீத் தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வனப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால் அதை சமாளித்து தீயை விரைவாக அணைப்பது எப்படி என்பது குறித்த வனத் துறையினருக்கு செயல் விளக்க நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் உடுமலை தீயணைப்பு நிலைய அலுவலா் ஹரிராமகிருஷ்ணன் தலையில் வீரா்கள் செயல் விளக்கம் அளித்தனா்.
இதில் வன ஆா்வலா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.