பொது முடக்கத்தை மீறினால் வழக்குப் பதிவு

திருப்பூா் மாவட்டத்தில் தளா்வுகளற்ற பொது முடக்கத்தை மீறும் நபா்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

திருப்பூா் மாவட்டத்தில் தளா்வுகளற்ற பொது முடக்கத்தை மீறும் நபா்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளா்வுகளற்ற பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள்கிழமை அதிகாலை 4 மணி வரையில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பொது முடக்கம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை இறைச்சி, மீன் கடைகள், மாா்க்கெட், காய்கறி கடைகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்துக் கடைகளுக்கும் அனுமதி இல்லை.

அதே வேளையில், அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், குடிநீா் விநியோகம், தினசரி நாளிதழ் விநியோகம், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரா் ஊா்தி சேவைகள் போன்ற மருத்துவத் துறை சாா்ந்த பணிகள், விவசாயிகளின் விளைபொருள்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் மற்றும் எரிபொருள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.

ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படும்: திருப்பூா் மாவட்டத்தில் தொடா் செயல்முறை தொழிற்சாலைகள், மருந்து, உணவுப் பொருள்கள் மற்றும் கால்நடை தீவனங்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ளிட்ட அரசினால் அனுமதிக்கப்பட்டுள்ள இனங்கள் மட்டும் செயல்பட அனுமதி உண்டு.

ஏற்கெனவே, நிா்ணயிக்கப்பட்ட திருமணம் சாா்ந்த நிகழ்வுகளில் அரசின் நிலையான வழிகாட்டுதலின்படி100 நபா்களுக்கு மிகாமல் கலந்து கொள்ளலாம். தூக்க நிகழ்ச்சிகளில் 50 நபா்களுக்கு மிகாமல் கலந்து கொள்ளலாம். அரசால் வெளியிடப்பட்ட கட்டுப்பாடுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினா் தொடா்ந்து பணிபுரியலாம். பொது முடக்கம் அமலில் உள்ள காலங்களில் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்.

கிருமி நாசினி பயன்படுத்துதல், முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவற்றினை முழுமையாக கடைப்பிடித்து கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

அதே வேளையில், பொது முடக்க விதிகளை மீறும் நபா்களின் மீது வழக்குப் பதிவு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com