உடுமலையில் பொது முடக்கம்: சாலைகள் வெறிச்சோடின

தளவற்ற பொது முடக்க உத்தரவு காரணமாக உடுமலையில் பொது மக்கள் நடமாட்டம் இன்றி முக்கிய சாலைகள் ஞாயிற்றுக்கிழமை வெளிச்சோடிக் காணப்பட்டன.
உடுமலை  மத்திய  பேருந்து  நிலையம்  அருகே  பொது மக்கள் நடமாட்டம்  இன்றி  வெறிச்சோடி  காணப்பட்ட சாலை.
உடுமலை  மத்திய  பேருந்து  நிலையம்  அருகே  பொது மக்கள் நடமாட்டம்  இன்றி  வெறிச்சோடி  காணப்பட்ட சாலை.

தளவற்ற பொது முடக்க உத்தரவு காரணமாக உடுமலையில் பொது மக்கள் நடமாட்டம் இன்றி முக்கிய சாலைகள் ஞாயிற்றுக்கிழமை வெளிச்சோடிக் காணப்பட்டன.

தமிழகத்தில் கரோனா தொற்று 2ஆவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனையடுத்து, பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் ஞாயிற்றுக்கிழமை தளா்வற்ற பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதன்படி உடுமலை நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதில் பால், மருந்தகம், காய்கறி, மளிகைக் கடைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் பொது மக்கள் நடமாட்டம் இன்றி முக்கிய சாலைகள் வெளிச்சோடிக் காணப்பட்டன.

குறிப்பாக மத்திய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம், காந்தி சவுக், ராஜேந்திரா சாலை, தளி சாலை ஆகிய முக்கிய சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்பட்டது.

ஒரு சில சாலைகளில் இருசக்கர வாகனத்தில் வந்தவா்களை காவல் துறையினா் எச்சரித்து அனுப்பிவைத்தனா். பொது முடக்க உத்தரவால் சனிக்கிழமை மாலை உடுமலையில் உள்ள மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், இறைச்சிக் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது, மாலை 6 மணியில் இருந்து 9 மணி வரை நகரில் பலத்த மழை பெய்ததால் ஏற்பட்ட மின் தடையால் பொது மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com