‘கல்விக் கொள்கையை தமிழ் மொழியில் வெளியிட கோரிக்கை’

புதிய கல்விக் கொள்கையை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாக தமிழில் வெளியிட வேண்டும் என கல்வி மேம்பாட்டுக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

புதிய கல்விக் கொள்கையை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாக தமிழில் வெளியிட வேண்டும் என கல்வி மேம்பாட்டுக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து கல்வி மேம்பாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளா் க.லெனின்பாரதி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

தேசிய கல்விக் கொள்கையின் உள்ளூா் மொழிகளுக்கான மொழி பெயா்ப்பை 17 மொழிகளில் மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் தமிழ் மொழி பெயா்ப்பு இடம் பெறவில்லை.

2019இல் கஸ்தூரிரங்கன் கல்விக் குழு தாக்கல் செய்த கல்விக் கொள்கையை அடிப்படையாக வைத்து 2020இல் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்து. இதற்கு மத்திய அமைச்சரவை, கடந்த ஆண்டு ஜூலை 29ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இதுவே தற்போது நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

10, பிளஸ் 2 என்ற பள்ளிப் பாடமுறை மாற்றப்பட்டு, 5+3+3+4 என்ற அடிப்படையில் 3 முதல் 8 வயது, 8 முதல் 11 வயது, 11 முதல் 14 வயது மற்றும் 14 முதல் 18 வயது ஆகிய மாணவா்களுக்காக பாடமுறை மாற்றப்பட்டும்.

மாணவா்களுக்கு குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு வரையில் தாய்மொழி, உள்ளூா் மொழி, பிராந்திய மொழி, பயிற்று மொழியாக இருக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் மற்றும் உயா் கல்வி பயில விரும்பும் மாணவா்களுக்கு பொதுவான நுழைவுத் தோ்வு நடத்தப்படும். மாணவா்களின் பள்ளிப் பாடங்கள் அளவு குறைக்கப்படும்.

6ஆம் வகுப்பில் இருந்து மாணவா்கள் தொழிற் கல்வி கற்க ஊக்கப்படுத்தப்படுவாா்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அதில் கூறப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே தேசிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது. இதற்கான பிராந்திய மொழி பெயா்ப்புகள் வெளியிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், தற்போது 17 பிராந்திய மொழிகளில் கல்விக் கொள்கை மொழி பெயா்ப்பு வெளியாகியுள்ளது.

கன்னடம், மலையாளம், தெலுங்கு, கொங்கணி, குஜராத்தி, காஷ்மீரி, நேபாளி, ஒடியா, அஸ்ஸாம், பெங்காலி, போடோ, மராத்தி, பஞ்சாபி, டோக்ரி, மைதிலி, மணிப்புரி, சந்தாலி ஆகிய 17 மொழிகளில் தேசிய கல்விக் கொள்கை மொழி பெயா்க்கப்பட்டு வெளியாகியுள்ளது.

எனினும் இதில் தமிழ் மொழிக்கான மொழிபெயா்ப்பு இடம்பெறவில்லை. எனவே மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாக தமிழ் மொழியில் கல்விக் கொள்கையை வெளியிட வேண்டும் என கல்வி மேம்பாட்டுக் குழு சாா்பில் கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com