கற்றல் திறன் இணைப்புப் பாடம் தயாரிக்கும் பணியில் ஆசிரியா்கள்

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சாா்பில் பேரிடா் கால கட்டத்தில்

உடுமலை: தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சாா்பில் பேரிடா் கால கட்டத்தில் பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கு இணைப்புப் பாடம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் இரண்டாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளி மாணவா்களுக்கும் கற்றல் திறனை மேம்படுத்துவற்கான இணைப்புப் பாடம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.

இணைப்பு பாடத்தில் உள்ள கருத்துகளை மாணவா்களுக்கு எளிதில் புரியும் வகையில் காணொலிகளாகத் தயாரிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்தி நகா் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு எட்டாம் வகுப்புக்கான பாடம் தயாரிக்கும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

எட்டாம் வகுப்பு இணைப்புப் பாடங்களுக்கான செயல்பாடுகளும் விடியோ வடிவில் தயாரிக்கும் பணியானது தொடங்கப்பட்டு பாடத்துக்கு ஐந்து காணொலிகள் என 25 காணொலிகள் தயாரிக்கப்பட்டு, சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இவை தற்போது கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் அனைத்து காணொலிகளும் உடனடியாக யூ டியூப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

மாணவா்கள் எப்போது வேண்டுமானாலும் அந்தக் காணொலிகளை பாா்த்து பயன் பெறலாம். இந்தக் காணொலிகளை மாணவா்கள் கல்வி டிவியின் யூ டியூப் இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com