முடிதிருத்தும் நிலையங்களை திறக்க அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி முடிதிருத்தும் நிலையங்களை திறக்க அனுமதி அளிக்கக் கோரி
திருப்பூா் மாவட்ட  ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த அனைத்து மருத்துவா் மக்கள் முன்னேற்றக் கழகத்தினா்.
திருப்பூா் மாவட்ட  ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த அனைத்து மருத்துவா் மக்கள் முன்னேற்றக் கழகத்தினா்.

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி முடிதிருத்தும் நிலையங்களை திறக்க அனுமதி அளிக்கக் கோரி அனைத்து மருத்துவா் மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து அந்த அமைப்பின் மாவட்டச் செயலாளா் கே.லோகநாதன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

கடந்த ஆண்டு பரவிய கரோனா நோய்த் தொற்றால் முடிதிருத்தும் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு தற்போதுதான் ஒரளவு இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறோம். இந்த நிலையில், தமிழக அரசு மீண்டும் முடிதிருத்தும் நிலையங்களை அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது இந்த உத்தரவு காரணமாக தமிழகத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் மற்றும் அவா்களை நம்பியுள்ள குடும்பத்தினா் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். ஆகவே, தமிழக அரசு கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி முடிதிருத்தும் நிலையங்களை நேரக் கட்டுப்பாடுடன் திறக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் தடை உத்தரவு நீடிக்கும் வரையில் ஒவ்வொரு தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கும் மாதம் தலா ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதி மருத்துவா் இயக்கம் சாா்பில் மனு: கரோனா தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு முடிதிருத்தும் தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.15 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வரும் முடிதிருத்தும் நிலையங்களைத் திறக்கும் வரையில் வாடகையை ரத்து செய்ய வேண்டும். கடைகளின் மின்சாரக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். நாள்தோறும் காலை 6 முதல் பிற்பகல் 12 மணி வரையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com