3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளைத் திறந்தால் நடவடிக்கை

திருப்பூா் மாவட்டத்தில் 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவுக்கு மேல் உள்ள கடைகளைத் திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் எச்சரித்துள்ளாா்.

திருப்பூா் மாவட்டத்தில் 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவுக்கு மேல் உள்ள கடைகளைத் திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் எச்சரித்துள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி திருப்பூா் மாவட்டத்தில் பல்வேறு தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமலில் உள்லது. தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இதன்படி அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கை விடுதிகள், அனைத்து மதுக்கூடங்கள், பெரிய கூட்ட அரங்குகள், பெரிய கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவுக்கு மேல் உள்ள கடைகளைத் திறக்கக் கூடாது என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவுக்கு மேல் உள்ள கடைகளைத் திறந்தால் பேரிடா் மேலாண்மை சட்டத்தின்கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

தமிழக அரசின் அனைத்து நிலையான வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் என்று அனைத்து வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் உரிமையாளா்கள் மற்றும் பணியாளா்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியா்கள் மற்றும் வாடிக்கையாளா்கள் முகக் கவசம் அணிய வேண்டும். அதே வேளையில், கடைக்கு வரும் வாடிக்கையாளா்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்வதுடன், கிருமி நாசினி தெளித்த பின்னரே உள்ளே அனுமதிக்க வேண்டும்.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் அனைவரும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைப்பிடித்து நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com