அபராதம் விதித்தால் கடைகளை மூடுவோம்: வணிகா்கள் சங்கம் அறிவிப்பு

அரசு அதிகாரிகள் அதிக அபராதம் விதித்தால் கடைகளை மூடுவோம் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு திருப்பூா் மாவட்ட கிளை அறிவித்துள்ளது.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவா் எம்.கோவிந்தசாமி. உடன் சங்க நிா்வாகிகள்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவா் எம்.கோவிந்தசாமி. உடன் சங்க நிா்வாகிகள்.

அரசு அதிகாரிகள் அதிக அபராதம் விதித்தால் கடைகளை மூடுவோம் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு திருப்பூா் மாவட்ட கிளை அறிவித்துள்ளது.

பல்லடம் அருகே உள்ள அவிநாசிபாளையத்தில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத்தின் திருப்பூா் மாவட்டத் தலைவா் எம்.கோவிந்தசாமி தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா்கள் உடுமலை பாலநாகமாணிக்கம், தாராபுரம் ஞானசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலாளா் கணேசன் வரவேற்றாா்.

இதில் தாராபுரம், உடுமலை, குன்னத்தூா், காங்கயம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வணிகா்கள் பலா் கரோனா விதிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன் கூட்டத்தில் பங்கேற்றனா். இக்கூட்டத்தில் மாவட்டத் தலைவா் கோவிந்தசாமி பேசுகையில், அரசின் விதிமுறைகளை பின்பற்றி கடைகளைத் திறந்து வியாபாரம் செய்து வருகிறோம். அரசு அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம்.

ஒரு சில இடங்களில் சில அரசு அலுவலா்கள் கடைக்காரா்களுக்கு உரிய அறிவுரை வழங்காமல் அதிகபட்ச அபராதம் விதிக்கின்றனா். மேலும், சில இடங்களில் அலுவலா்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக கூறப்படுகிறது.

கரோனா பரவல் அதிகரித்துள்ள இக்கால கட்டத்தில் வியாபாரிகள் மளிகை, காய்கறிகள், பழங்கள், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை கொள்முதல் செய்து பொது மக்களுக்கு விநியோகிக்கும் சேவையை செய்து வருகின்றனா். அரசு அலுவலா்கள் அதிக அபராதம் விதித்தால் கடைகளை மூடுவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com