திருப்பூா் மாவட்டத்தில் 22 கோயில்களில் 3 நாள்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 22 கோயில்களில் ஆடி கிருத்திகை, ஆடி பெருக்கு, ஆடி அமாவாசை ஆகிய 3 நாள்களுக்கு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 22 கோயில்களில் ஆடி கிருத்திகை, ஆடி பெருக்கு, ஆடி அமாவாசை ஆகிய 3 நாள்களுக்கு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கத்தை மேலும் ஒரு வாரம் நீட்டித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா். மேலும், கரோனா நோய்த் தடுப்பு விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியா்கள், காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளாா்.

மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கரோனா நோய்த் தொற்று சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஆடி கிருத்திகை (ஆக.2), ஆடிப்பெருக்கு (ஆக.3), ஆடி அமாவாசை (ஆக.8) ஆகிய 3 நாள்களுக்கு கீழ்கண்ட 22 கோயில்களில் பக்தா்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை. அதே வேளையில், சுவாமிக்குத் தொடா்ந்து பூஜைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவாமி தரிசனம் ரத்து செய்யப்படும் கோயில்கள்:

அய்யம்பாளையம் வாழைத் தோட்டத்து அய்யன் கோயில், சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில், அவிநாசி லிங்கேஸ்வரா் கோயில், திருமூா்த்திமலை அமணலிங்கேஸ்வரா் கோயில், தாராபுரம் அகஸ்தீஸ்வா் கோயில், சா்க்காா் பெரியபாளையம் சுக்ரீஸ்வரா் கோயில், முத்தூா் செல்வகுமார சுவாமி கோயில், முத்தூா் அத்தனூரம்மன் மற்றும் குப்பியண்ண சுவாமி கோயில், மூலனூா் வஞ்சியம்மன் கோயில், மேட்டுப்பாளையம் நாட்ராய சுவாமி கோயில், வெள்ளக்கோவில் வீரகுமாரசுவாமி கோயில், மணலூா் செல்லாண்டியம்மன் கோயில், வள்ளியரச்சல் அழகு நாச்சியம்மன் கோயில், கருவலூா் மாரியம்மன் கோயில், வெள்ளியம்பதி பத்ரகாளியம்மன் கோயில், தாராபுரம் காடு அனுமந்தராய சுவாமி கோயில், பரஞ்சோ்வழி கரிய காளியம்மன் கோயில், கொடுமணல் தங்கம்மன் கோயில், ஊத்துக்குளி வெற்றிவேலாயுத சுவாமி கோயில், திருப்பூா் விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவப் பெருமாள் கோயில், பாப்பிணி பெரியநாயகியம்மன் கோயில், முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோயில்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com