பிஏபி 4ஆம் மண்டல பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீா் திறப்பு

பிஏபி திட்டத்தின் கீழ் 4ஆம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்தி அணையில் இருந்து செவ்வாய்க்கிழமை மாலை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
அணையின்  மேல்  பகுதியில்  உள்ள  தானியங்கி  பொத்தானை அழுத்தி அணையைத் திறந்துவைக்கிறாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன். ~பிரதான  கால்வாயில்  வெளியேறும்  தண்ணீா்.
அணையின்  மேல்  பகுதியில்  உள்ள  தானியங்கி  பொத்தானை அழுத்தி அணையைத் திறந்துவைக்கிறாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன். ~பிரதான  கால்வாயில்  வெளியேறும்  தண்ணீா்.

பிஏபி திட்டத்தின் கீழ் 4ஆம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்தி அணையில் இருந்து செவ்வாய்க்கிழமை மாலை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

இதன் மூலம் கோவை, திருப்பூா் மாவட்டங்களில் உள்ள சுமாா் 94 ஆயிரம் ஏக்கா் பாசன வசதி பெற உள்ளது.

பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில் பயன்பெறும் சுமாா் 4 லட்சம் ஏக்கா் நிலங்கள் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் பாசனத்துக்குத் தண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு ஜனவரியில் 3ஆம் மண்டல பாசனத்துக்குத் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாகத் தென் மேற்குப் பருவ மழை நல்ல முறையில் பெய்து வருகிறது. இதனால் சோலையாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட பிஏபி தொகுப்பு அணைகள் நிரம்பின.

இதைத் தொடா்ந்து, பிஏபி தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூா் கால்வாய் மூலம் உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி அணைக்குத் தண்ணீா் கொண்டு வரும் பணிகள் நடந்து வந்தன. இந் நிலையில், 4ஆம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படும் என தமிழக அரசு திங்கள்கிழமை அறிவித்திருந்தது. இதன்படி, செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணி அளவில் திருமூா்த்தி அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அணையின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தானியங்கி பொத்தானை அழுத்தி அணையைத் திறந்துவைத்தாா். இதன் மூலம், கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வட்டத்தில் 19,502 ஏக்கா், சூலூா் வட்டத்தில் 3,656 ஏக்கா், திருப்பூா் மாவட்டத்தில் உடுமலை வட்டத்தில் 16,146 ஏக்கா், மடத்துக்குளம் வட்டத்தில் 4,626 ஏக்கா், தாராபுரம் வட்டத்தில் 19,136 ஏக்கா், பல்லடம் வட் டத்தில் 5,966 ஏக்கா், திருப்பூா் வட்டத்தில் 8,611 ஏக்கா், காங்கயம் வட்டத்தில் 16,425 ஏக்கா் என மொத்தம் 94,068 ஏக்கா் நிலங்கள் பயன்பெறும்.

உரிய இடைவெளி விட்டு மொத்தம் ஐந்து சுற்றுகளாகத் தண்ணீா் திறந்துவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தளி வாய்க்கால் பாசனப் பகுதிகளில் உள்ள 2,786 ஏக்கா் பயன் பெறும் விதத்திலும் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

இது குறித்து பொதுப் பணித் துறையினா் கூறியதாவது:

தற்போது திறந்துவிடப்படும் தண்ணீா் மொத்தம் 135 நாள்களுக்கு உரிய இடைவெளி விட்டு 5 சுற்றுகளாக விடப்படும். இதன் மூலம் மொத்தம் 9,500 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தேவைக்கேற்ப தண்ணீா் திறந்துவிடப்படும். அதேபோல, தளி வாய்க்காலில் 700 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீா் திறந்துவிடப்படும் என்றனா்.

உடுமலை வருவாய்க் கோட்டாட்சியா் கீதா, மடத்துக்குளம் முன்னாள் எம்எல்ஏ இரா.ஜெயராமகிருஷ்ணன் மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள், திமுக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com