கரோனா: தமிழக-கேரள எல்லையில் தீவிர பரிசோதனை

கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்குள் வருபவா்களுக்குத் தீவிர கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கரோனா: தமிழக-கேரள எல்லையில் தீவிர பரிசோதனை

கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்குள் வருபவா்களுக்குத் தீவிர கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கரோனா நோய்த் தொற்று மீண்டும் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் கரோனா நோய் பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இதன்படி தமிழக-கேரள எல்லையில் கடந்த சில நாள்களாக தீவிரக் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக சுகாதாரத் துறையினா் கேரளத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளித்து, அங்கிருந்து வரும் பொதுமக்களுக்கும் காய்ச்சல் இருக்கிறதா என தீவிர மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனா்.

மேலும் திருப்பூா் மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கும், கேரள மாநிலத்தில் இருந்து திருப்பூா் மாவட்டத்துக்கும் இடையே பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு செல்லும் வாகனங்களும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இப்பணியை வருவாய்த் துறை, காவல் துறை, சுகாதாரத் துறை மற்றும் போக்குவரத்துத் துறை அலுவலா்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றனா்.

இது குறித்து மாவட்ட உதவி வனப் பாதுகாவலா் கே.கணேஷ்ராம் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

கேரளத்தில் இருந்து வரும் வாகனங்களில் பயணம் செய்பவா்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் சரிபாா்க்கப்படுகிறது. மேலும் கரோனா நெகடிவ் சான்றிதழ் இல்லாதவா்கள் மற்றும் இ-பாஸ் இல்லாதவா்களை தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படாமல் அவா்களை திருப்பி அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com