நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க ஆலோசனைக் கூட்டம்

மடத்துக்குளம் வட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மடத்துக்குளம் வட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணை பாசனப் பகுதிகளான கொழுமம், குமரலிங்கம், மடத்துக்குளம், சோழமாதேவி, காரத்தொழுவு, கணியூா், கடத்தூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்டோபா் முதல் வாரத்தில் அறுவடை துவங்க உள்ள நிலையில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதைத் தொடா்ந்து நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்குவற்கான ஆலோசனைக் கூட்டம் மடத்துக்குளம் வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் மனோகரன் தலைமை வகித்தாா். மாவட்ட வேளாண் துணை இயக்குநா் மகாதேவன், தமிழ்நாடு நுகா் பொருள் வாணிப கழக உதவி

மேலாளா் காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் இரண்டு கிராமங்களுக்கு ஒரு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கவும், உலா் கலங்கள் அமைக்க ஏதுவான இடங்களைத் தோ்வு செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மடத்துக்குளம் வட்டாரத் துணை வேளாண் அலுவலா் ராஜேஸ்வரி, அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com